ரோகித் சர்மா
ரோகித் சர்மா

சிக்சர் மழை பொழிந்த ரோகித்… அரைஇறுதியில் இந்தியா!

Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய வீரர் விராட் கோலி டக் –அவுட் ஆக, ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம் ஆஸ்திரேலியாவை கதிகலங்க வைத்தது. அவர் 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார்.

அவருக்கு அடுத்து ரிஷப் பண்ட் 15, சூர்யகுமார் யாதவ் 31, சிவம் துபே 28, ஹர்திக் பாண்டியா 27 ரன்கள் குவித்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது.

அதன்பின் ஆடிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீரர் டேவிட் வார்னர் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் மிட்செல் மார்ஷ் - ட்ராவிஸ் ஹெட் ஜோடி சிறப்பாக விளையாடியது.

மார்ஷ் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடிய போதும் 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். மார்கஸ் ஸ்டோனிஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு பக்கம் விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் ட்ராவிஸ் ஹெட் 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். பும்ரா வீசிய 17வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த டிம் டேவிட் 15, மேத்யூ வேட் 1, பாட் கம்மின்ஸ் 11 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

சிக்சர் மழை

92 ரன்கள் அடித்த ரோகித் சர்மா நேற்றை ஆட்டத்தில் 8 சிக்சர்கள் அடித்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் ஒருவீரர் அடித்த அதிகபட்ச சிக்சர் இதுதான்.

சரவதேச டி20 போட்டியில் அதிக சிக்சர் (203) அடித்த முதல் வீரர் என்ற பெருமை ரோகித் சர்மாவுக்கு உண்டு

logo
Andhimazhai
www.andhimazhai.com