பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி!

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய ஹாக்கி வீரர்கள்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய ஹாக்கி வீரர்கள்
Published on

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் காலிறுதி சுற்றில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இந்தியா - பிரிட்டன் இடையிலான காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 13வது நிமிடத்தில் இந்திய வீரர் அமித் ரோகித் தாஸ் செய்த தவறு காரணமாக அவருக்கு ரெட் கார்ட் அளிக்கப்பட்டது.

அந்த வீடியோவில் இந்திய வீரர் அமித் ரோகித் தாஸ் தனது ஹாக்கி ஸ்டிக்கால் இங்கிலாந்து வீரரின் முகத்தில் தாக்கியது தெரிய வந்தது. இதன் காரணமாக வெறும் 10 வீரர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவின் முக்கியமான டிஃபென்ஸ் வீரராக இருந்த அமித் வெளியேற்றப்பட்டதால், இந்தியா தடுமாறியது.

ஆனால் 10 வீரர்களோடு விளையாடினாலும் பிரிட்டன் அணியால் ஒரு கோலுக்கு மேல் அடிக்க முடியவில்லை. கடைசி நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து இருந்ததால், வெற்றியாளரை தேர்வு செய்வதற்கு ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது.

இரு அணிகளும் முதல் 2 கோல்களை எளிதாக அடித்த நிலையில், 3ஆவது முறையாக பிரிட்டன் வீரர் வில்லியம்சனின் ஷாட்டை ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து இந்திய வீரர் லலித் புத்திசாலித்தனமாக டிரிஃப்ட் செய்து 3ஆவது கோலை அடிக்க, இன்னும் ஒரேயொரு ஷாட்டை மட்டும் தடுத்தால் இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப இங்கிலாந்து அணியின் ரூப்பர் கொஞ்சம் தள்ளிச் சென்று கோல் அடிக்க முயன்ற போது, ஸ்ரீஜேஷ் அப்போதும் விடவில்லை. இதனால் அவர் அடித்த பந்து கோல் போஸ்ட்-க்கு வெளியில் சென்றது. இதன்பின் இந்தியாவின் ராஜ்குமார் பால் அசத்தலாக ஒரு கோலை அடித்து 4-2 என்ற கணக்கில் இந்தியாவை வெற்றிபெற வைத்தார். இதற்கு முக்கிய காரணமான ஸ்ரீஜேஷுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com