செஸ் விளையாட்டு: விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத்தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த குகேஷ்!

விஸ்வநாதன் ஆனந்த் - குகேஷ்
விஸ்வநாதன் ஆனந்த் - குகேஷ்Office
Published on

5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத்தள்ளி 17 வயதான குகேஷ் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராகி உள்ளார்.

பிஃடே உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதில் 17 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் 2வது சுற்றில் அஜர்பைஜானின் மிஸ்ரடின் இஸ்கந்தரோவ் எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 44-வது காய் நகர்த்தலின் போது குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் பிஃடேவின் லைவ் ரேட்டிங்கில் குகேஷ் 2755.9 புள்ளிகளுடன் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத்தள்ளி 9-வது இடத்தை பிடித்தார். விஸ்வநாதன் ஆனந்த் 2754.0 புள்ளிகளுடன் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 1ஆம் தேதி அடுத்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதுவரை குகேஷ், ஆனந்தை விட முன்னிலையில் இருந்தால் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக உருவெடுப்பார். கடந்த 1988ஆம் ஆண்டு முதல் விஸ்வநாதன் ஆனந்த், இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக இருந்து வருகிறார். முன்னதாக 1986ஆம் ஆண்டு ஜூலை மாதம் விஸ்வநாதன் ஆனந்தை, பிரவீன் திப்சே முந்தியிருந்தார். அப்போது திப்சே 2,485 புள்ளிகளும் ஆனந்த் 2420 புள்ளிகளும் எடுத்திருந்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com