சுப்மன் கில்
சுப்மன் கில்

உலகக்கோப்பை: ஆசி.க்கு எதிராக சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம்!

Published on

இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

ஒருநாள் உலகக் கோப்பை முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது நியூசிலாந்து அணி.

உலகக் கோப்பை தொடர் தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுப்மன் கில்லுக்கு டெய்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி சென்னைக்கு வந்த நாள் முதலே சுப்மன் கில்லுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இன்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் காய்ச்சலிலிருந்து குணமாக குறைந்தது ஒருவார காலம் ஆகும் என்பதால், வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கான முதல் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

காய்ச்சல் தொடர்ந்தால், அவருக்குப் பதில் இஷான் கிஷன் அல்லது கே.எல். ராகுல் தொடக்க வீரராக இறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com