உலகக் கோப்பை தொடர் தோல்வி: இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு !

இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு
இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு
Published on

உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றை எட்டியுள்ளன. மீதமுள்ள 2 அணிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள இலங்கை அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 போட்டியில் தோல்வியும் 2 போட்டிகளில் வெற்றியும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வியை இலங்கை தழுவியது. இதனால் இலங்கை அணிக்கு எதிராக அந்நாட்டு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், உலகக்கோப்பையில் தொடர் தோல்வி காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து இலங்கை விளையாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக தலைவராக அர்ஜுனா ரணதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com