சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்களுக்கான டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜஸ்பிரித் பும்ரா, சக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினைவிட ஒரு புள்ளிகள் முந்தி, இரண்டாவது முறையாக முதல் இடத்தைப் பிடித்தார்.
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 72 மற்றும் 51 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் பேட்மேன்கள் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 3ஆம் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
வங்கதேசத்துக்கு எதிரான வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது.