ஆசியக் கோப்பை: ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடியால் சூப்பர் 4 சுற்றில் இந்தியா!

ரோகித் சர்மா
ரோகித் சர்மா
Published on

நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆசியக் கோப்பை போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேபாளத்துக்கு எதிரான ஆட்டம் நேற்று கண்டியில் நடைபெற்றது. மழை பாதிப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு தேர்வு செய்தது.

நேபாள அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய புர்டெல் 58 ரன்களும், குஷால் 38 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அடுத்த வீரர்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை. இதனால் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த நேபாள அணி 230 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 17 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனையடுத்து 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 67 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com