அஸ்வின் சுழலில் வீழ்ந்த வங்கதேசம்... முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி!

Ashwin Takes Six Wickets
6 விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின்
Published on

சென்னையில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டம் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது.

இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா தனது 2ஆவது இன்னிங்சில் 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 119 ரன் (நாட் அவுட்), ரிஷப் பண்ட் 109 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் 3ஆவது நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்திருந்தது. ஷாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இந்த நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஷாண்டே 81 ரன்களில் ஆட்டமிழக்க, அல் ஹசன் 25 ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளையும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com