‘அறுவை சிகிச்சையை நேரு ஸ்டேடியத்தில் வைத்தா பண்ண வேண்டும்’? - கொந்தளித்த அமைச்சர் மா.சு

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் வெளிப்படைத் தன்மை இல்லை என யாரேனும் கூறினால், அறுவை சிகிச்சையை நேரு ஸ்டேடியத்தில் வைத்தா பண்ண முடியும்?’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு சென்னை முழுவதும் 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மக்கள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தவர், ”அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் இன்னும் பேசவில்லை. அவரிடம் யார் பேச வேண்டும் என்றாலும் சிறைத்துறையின் அனுமதி பெற்று தான் பேச வேண்டும். அவரின் குடும்பத்தினர் அனுமதி பெற்று அவரை சந்திக்கின்றனர்.

பொதுவாக இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஐசியுவில் வைத்து இருப்பார்கள், பிறகு பொது வார்டுக்கு மாற்றுவார்கள். அதன் பிறகு தான் வீட்டுக்கு அனுப்பப்படுவர். பின்னரும் மருத்துவக் கண்காணிப்பு தொடரும்.

செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்தவர் ஏ.ஆர்.ரகுராம் எனும் மிக பெரிய மருத்துவ நிபுணர். செந்தில் பாலாஜியின் மருத்துவ சிகிச்சையை யார் நம்பவில்லையோ அவர்களை அறுவை சிகிச்சை செய்து கொள்ள சொல்லுங்கள். அப்போட்துதான் அறுவை சிகிச்சை என்றால் என்னவென்று புரியும். சந்தேகப்படுகின்றவர்களை அழைத்து வாருங்கள், நானே அட்மிசன் வாங்கி தருகிறேன். அவர்களை இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள சொல்லுங்கள். அப்போதுதான் அதன் வலி தெரியும்.

அதேபோல், சிகிச்சையில் வெளிப்படைத் தன்மை இல்லை என யாரேனும் கூறினால், அறுவை சிகிச்சையை நேரு ஸ்டேடியத்தில் வைத்தா பண்ண வேண்டும்? 15 ஆயிரம் பேர் முன்னிலையில் சிகிச்சை அளித்தால் நம்புவார்களா.? என ஆவேசமாக கேள்வி எழுப்பினர் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com