சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி!

கூலி படப்பிடிப்பில் மழையில் நனைந்ததால் உடல் நலக்குறைவா?
ரஜினிகாந்த் (கோப்புப்படம்)
ரஜினிகாந்த் (கோப்புப்படம்)
Published on

தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடி­கர் ரஜி­னி­காந்­தின் ‘வேட்­டை­யன்’ திரைப்­படம் விரை­வில் வெளி­யாக உள்ளது. இப்­ப­டத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்­கத்­தில் ‘கூலி’ படத்­தி­லும் ரஜி­னி­காந்த் நடித்து வரு­கி­றார்.

கடந்த மாதம் 28ஆம் தேதி விசா­கப்பட்­டி­னத்­தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்­து­விட்டு சென்னை திரும்­பி­ய ரஜினி­க்கு கடந்த பத்து நாட்களுக்­கும் மேலாக சிறு­நீர் கழிப்­ப­தில் பிரச்­சினை இருந்து வந்துள்ளது. அடி­வயிற்­றில் சற்று வீக்­கம் ஏற்­பட்டு வலி­யும் இருந்து வந்த நிலை­யில், மருத்து­வர்­களின் பரிந்­து­ரைப்­படி மருந்து­க­ளை­யும் சில மருத்­து­வப் பரிசோதனை­யும் எடுத்து வந்துள்­ளார்.

மருத்­து­வப் பரிசோதனை முடி­வு­கள் வந்த நிலை­யில், நேற்று இரவு, ரஜி­னிக்கு லேசான நெஞ்சு வலி மற்­றும் அடி­வ­யிறுவீக்கம் காரணமாக இரவு 10 மணி­ய­ளவில் சென்னை ஆயி­ரம் விளக்கு பகு­தி­யில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னையில் அனுமதிக்கப்பட்டார். உட­னடி யாக இசிஜி எக்கோ பரி­சோதனைகள் நடத்தப்பட்­டன. மேலும் அவ­ருக்கு ஏற்­க­னவே சிறுநீரக மாற்று அறு­வை­சிகிச்சை செய்­யப்­பட்­டி­ருப்­ப­தால், அதில் ஏதே­னும் பிரச்னை இருக்­குமா என்ற கோணத்திலும் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவருக்கு சிறுநீரகத்துக்கும் செல்லும் நரம்பில் சதை வளர்ந்திருப்பதால், அதுதான் வீக்கம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து ரஜினிக்கு இன்று அதிகாலை சிகிச்சை தொடங்கிய நிலையில், சதை வளர்ந்திருக்கும் கிட்னி நரம்புப் பகுதியில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரஜினி தனியறைக்கு மாற்றப்பட்டுள்ள அவர், கண் விழித்ததும் தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ள அவர் நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூலி படப்பிடிப்பின்போது தொடர்ந்து மழையில் நனைந்தவாறே படப்பிடிப்பில் கலந்துகொண்டதாகவும் அதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com