பாஜக கூட்டணி கூட்டம்; பங்கேற்கும் 5 தமிழக கட்சிகள்!

பாஜக கூட்டணி கூட்டம்;   பங்கேற்கும் 5 தமிழக கட்சிகள்!
Published on

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு ஒராண்டுக்கும் குறைவான காலமே இருப்பதால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. முக்கியமாக பாஜக வீழ்த்த முக்கிய எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. எதிர்கட்சிகள் கடந்த மாதம் பீகாரிலும் நேற்று பெங்களூருவிலும் ஒன்றுகூடி செயல்திட்டத்தை வகுத்துவருகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கு ஆளும் பாஜக தரப்பும் ஆயத்தமாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் 38 கட்சிகள் பங்கேற்க இருப்பதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், ஐஜேகே ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், எடப்பாடி பழனிசாமி, ஜி.கே,வாசன், ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அவரது கட்சி சார்பில் மூத்த நிர்வாகி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com