குழந்தை விளையாடுவதைப் போல சுற்றும் சந்திராயன் -3 பிரக்ஞான் ரோவர்
குழந்தை விளையாடுவதைப் போல சுற்றும் சந்திராயன் -3 பிரக்ஞான் ரோவர் ISRO

சந்திரயான் - குழந்தை விளையாடுவதைப் போல சுற்றும் ரோவர்... புதிய வீடியோ!

Published on

சந்திரயான் விண்கலத்தின் அடுத்த வீடியோ காட்சியை இன்று பிற்பகலில் இஸ்ரோ வெளியிட்டது.

நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்ஞான் ரோவர் கலமானது, அங்கு தரைப்பரப்பில் நகர்ந்துசென்று அன்றாடம் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. நேற்றுடன் முடிவடைந்த ஒரு வார காலத்தில், நிலவின் தரைப்பரப்பில் பலவிதமான வெப்ப நிலைகள் காணப்படுவதையும், இரும்பு, கால்சியம், கந்தகம், ஆக்சிஜன் உட்பட பல தனிமங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தது.

அதைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது முறையாக கந்தகம் இருப்பதை புதிய முறையில் உறுதிசெய்தது. இந்திய மக்களையும் விண்வெளி ஆர்வலர்களையும் தொடர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்த்திவரும் சந்திரயான்-3 விண்கலத்தில், இன்று பிரக்ஞான் ரோவரின் புதிய நகர்வு வீடியோ காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 

விக்ரம் லேண்டரில் உள்ள லேண்டர் இமேஜிங் கேமரா இந்த அருமையான காட்சியைப் படம்பிடித்துள்ளது. மாமாவிடம் ஒரு குழந்தை விளையாடுவதைப் போலவும் அதை அம்மா பார்ப்பதைப் போலவும் இருக்கிறது அல்லவா என இஸ்ரோ விஞ்ஞானிகள் பரவசத்தோடு குறிப்பிட்டுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com