காங்கிரஸ் கூப்பிடல... பாஜகவும் கூப்பிடல : பெருமூச்சு விட்ட குமாரசாமி!

எச்.டி. குமாரசாமி
எச்.டி. குமாரசாமி
Published on

காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடகாவில் இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது. இதற்காக 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், வைகோ, தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பெங்களூரு செல்கின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் ஹெச்.டி. குமாரசாமி இந்தக் கூட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்தார். அவர் பேசும்போது, ''எதிர்க்கட்சிகள் மதசார்பற்ற ஜனதா தளத்தை அவர்களின் ஒரு பகுதியாக கருதவே இல்லை. அதனால், மெகா கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் இருக்குமா? என்பதற்கான கேள்விக்கே இடமில்லை'' என்றார். பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா? என்ற கேள்விக்கு, ''எங்களை அவர்கள் அழைக்கவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்'' என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com