இந்தியா
வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய நிலையை தொடரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. இறக்குமதி வரியிலும் எந்த மாற்றமும் இல்லை. அதேபோன்று நேரடி மற்றும் மறைமுக வரியிலும் எந்த மாற்றமும் இல்லை. பழைய வருமான வரி வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றார்.
வளர்ச்சியின் பலன்களை ஏழை மக்கள் அடைய தொடங்கியுள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.