மிசோரம் தேர்தல்: முதலமைச்சர் சோரம்தங்கா சொல்லும் கணக்கு!

மிசோரம் முதலமைசர் சோரம்தங்கா
மிசோரம் முதலமைசர் சோரம்தங்கா
Published on

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 25 முதல் 30 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் சோரம் தங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மிசோரமில் சோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணியின் பதவிக் காலம் டிசம்பர் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மொத்தம் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்கள் முன்னணி, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சோரம்தங்கா, " 40 இடங்களிலும் 25- 30 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைப்போம். காங்கிரஸ் கட்சி ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வெற்றி பெறலாம் அல்லது அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைய வாய்ப்புள்ளது. பா.ஜ.க.வின் நிலையும் இதே தான். சோரம் மக்கள் கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்தாலே பெரிய விஷயம். மீண்டும் ஆட்சி அமைக்க மிசோ தேசிய முன்னணிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன." என்று கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com