இந்தியா
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாளை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
இரு மாநிலங்களிலும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அருணாச்சலப் பிரதேசத்தில் 60 தொகுதிகள் உள்ளன. இங்கு முதலமைச்சர் பெமா காண்டு உட்பட 10 பா.ஜ.க.வினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். எனவே, மீதமுள்ள 50 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.
சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
இரண்டு மாநிலங்களிலும் தற்போதைய ஆட்சியின் பதவிக் காலம் நாளை முடிவடைவதால், முடிவை அறிவித்தாக வேண்டும் எனும் கட்டாயத்தை நோக்கி மாநிலம் காத்திருக்கிறது.