மத்திய அமைச்சரின் மனைவி டெங்குவால் உயிரிழப்பு!

ஜிங்கியா ஓரம்
ஜிங்கியா ஓரம்
Published on

மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரமின் மனைவி ஜிங்கியா ஓரம் டெங்கு காய்ச்சலால் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 58.

மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஜூவல் ஓரம். இவரது மனைவி ஜிங்கியா. இவர் டெங்கு பாதிப்பு காரணமாக கடந்த ஒன்பது நாள்களுக்கு முன்னர் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்து நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு காலமானார். அவரின் மறைவுக்கு ஒடிசா மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதே மருத்துவமனையில் ஜூவல் ஓரமும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரின் மனைவி ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com