மத்திய சட்டத்துறை அமைச்சர் பதவியில் இருந்து கிரண் ரிஜிஜு நீக்கம்!

அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால். கிரண் ரிஜிஜு
அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால். கிரண் ரிஜிஜு
Published on

மத்திய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு அர்ஜுன் ராம் மேக்வாலை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படி இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில்  இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சட்டத்துறை அமைச்சராக  அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அர்ஜூன் ராம் மேக்வால் கலாச்சாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த நிலையில் அவர் சட்டத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிரண் ரிஜிஜு, நீதிபதிகளை நியமிக்க தற்போது நடைமுறையில் உள்ள கொலிஜீயம் முறைக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அதே நேரத்தில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் தேசவிரோத குழுக்களின் பகுதியாக இருப்பதாக கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

logo
Andhimazhai
www.andhimazhai.com