பட்ஜெட் 2024: ஆந்திராவையும் பீகாரையும் ஸ்பெஷலாக கவனித்த நிதியமைச்சர்!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Published on

விவசாய உற்பத்தித்திறன், வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு, உட்கட்டமைப்பு, நகர்ப்புற வளர்ச்சி உட்பட 9 அம்சங்களுக்கு வரும் ஆண்டுகளில் முன்னுரிமை கொடுக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 7ஆவது பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வாசிக்கப்படும் முதல் முழுமையான பட்ஜெட் இது.

தொடர்ந்து ஏழு முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற புதிய சாதனையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படைத்துள்ளார்.

பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய நிர்மலா சீதாராமன், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் உலக அளவில் பொருளாதாரம் சவால்களைச் சந்தித்தாலும் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துவதாகவும் கூறினார்.

அவர் வெளியிட்டு சில முக்கிய அறிவிப்புகள்:

* 4.1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

* இளைஞர்களின் வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்புக்காக 5 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதற்காக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

* கிராம அளவில் பயோ உரங்கள் வழங்கப்படும்.

* கடுகு, எள், சூரிய காந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துது பயிர்களின் சாகுபடி ஊக்குவிக்கப்படும்.

* காய்கறி விற்பனை தொடர் சங்கிலி உருவாக்கப்படும்.

* வேளாண் துறையில் டிஜிட்டல் முறை புகுத்தப்படும்

* ரூ.1.52 லட்சம் கோடி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு.

* டிஜிட்டல் பயிர் சாகுபடி முறை பின்பற்றப்படும்.

* டிஜிட்டல் முறையில் கரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் சர்வே செய்யப்படும்.

* 1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்க மாற்றப்படுவார்கள்.

* கல்வி, தொழில்திறன் மேம்பாட்டுக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு

வரும் ஆண்டுகளில் அரசு முன்னுரிமை செலுத்தும் 9 அம்சங்கள்:

1. விவசாய உற்பத்தித்திறன்

2. வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு

3. மனித வள மேலாண்மை மற்றும் சமூக நீதியை

4. உற்பத்தி & சேவைகள்

5. நகர்ப்புற வளர்ச்சி

6. ஆற்றல் பாதுகாப்பு

7. உட்கட்டமைப்பு

8. புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி

9. அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள்

* புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் அரசு ஊதியம் வழங்கப்படும்.

* EPFO பதிவு செய்த இளைஞர்களுக்கு 15,000 முதல் 1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் மாத ஊதியம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரை நேரடியாக வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாகச் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தில் 2.1 கோடி இளைஞர்கள் பலன் அடைவார்கள்.

* கல்விக் கடன் 10 லட்சம் வரை வழங்கப்படும்.

* உற்பத்தி துறையில் 15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.

* முத்ரா கடன் தொகை வரம்பை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு.

* கிரெடிட் கேரன்டி திட்டத்தின் கீழ், உற்பத்தி துறையில் உள்ள நிறுவனங்களுக்கு 100 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.

* கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்களுக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கிடு.

* பெண்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நகரங்கள், கிராமங்களில் 3 கோடி வீடுகள் கட்டப்படும்.

* 500 முன்னணி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 5 கோடி இளைஞர்கள் இன்டர்ன்ஷிப் செய்வதற்கான திட்டம் செயல்படுத்தப்படும். இதில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்பவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும். பயிற்சி செலவுகளை நிறுவனங்கள் அவற்றின் CSR ஒதுக்கீட்டிலிருந்து மேற்கொள்ள வேண்டும்.

* முத்ரா கடன் தொகை வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டடுள்ளது.

* 12 தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

* IBC என்ற திவால் சட்டத்தின் கீழ் 1000க்கும் மேலான நிறுவனங்களின் வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. மட்டுமல்லாமல் ரூ. 3.3 லட்சம் கோடி அளவிலான கடன் மீட்கப்பட்டு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு:

* பீகாரில் சாலைகள், பாலங்கள் கட்ட 26,000 கோடி ஒருக்கீடு

* ஆந்திர மாநிலத்துக்கு 15,000 கோடி ஒதுக்கீடு.

பீகாரின் கயா முதல் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் வரை புதிய பொருளாதார வளர்ச்சி மையம் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com