சிறையிலிருந்தே வெற்றி பெற்ற 2 வேட்பாளர்கள்!

அம்ரித்பால் சிங், ரஷீத்
அம்ரித்பால் சிங், ரஷீத்
Published on

சிறையிலிருந்தபடியே நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட அம்ரித்பால் சிங், ரஷீத் ஆகியோர் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பல சுவாரசியங்களையும் ஆச்சரியங்களையும் கொடுத்திருக்கிறது.

எதிர்பாராத வகையில் சில சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கின்றனர். அவர்களில் சிலர் தற்போது சிறையில் இருக்கிறார்கள்.

காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் 2019 முதல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஷேக் அப்துல் ரஷீத், காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவை அவர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

ரஷீத் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால், அவரது மகன் தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அம்ரித்பால் சிங்

பஞ்சாப் மாநிலம் கடூர் சாஹிப் தொகுதியில் போட்டியிட்ட காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் 1.9 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அம்ரித்பால் சிங் தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அசாம் மாநிலம் திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

30 வயதான அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவாளர். சீக்கியர்களுக்கென தனி தேசம் உருவாக வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com