மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது:
பின்னர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு அவர் அளித்த பேட்டியில், “இன்று மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நமது கலாச்சாரத்தில் தானம் மிகப்பெரிய முக்கியத்துவம் கொண்டுள்ளது. எனவே ஒவ்வொரு குடிமகனும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். வாக்கு தானம் செய்ய வேண்டும். நான் எப்போதுமே இங்கிருந்து தான் வாக்களிக்கிறேன். இத்தொகுதியில் அமித் ஷா போட்டியிடுகிறார்” என்று கூறினார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகா மாநிலம் கலாபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாக்களித்தார்.
கலபுர்கி தொகுதியில் ராதாகிருஷ்ணா காங்கிரஸ் வேட்பாளராகவும், உமேஷ் ஜி ஜதாவ் பாஜக சார்பிலும் போட்டியிடுகின்றனர்.