பாடமாக ஆகும் யெச்சூரியின் உடல்- குடும்பத்தினர் தானம்!

sitaram yechuri
சீத்தாராம் யெச்சூரி
Published on

தில்லியில் இன்று மறைந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரியின் உடலை அவரின் குடும்பத்தினர் உடல் தானமாக வழங்கியுள்ளனர். மருத்துவ மாணவர்களின் கல்வி, ஆராய்ச்சிப் பயன்பாட்டுக்காக தில்லி, அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம்- எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரின் உடல் தானமாக அளிக்கப்பட்டுள்ளது என்று அதன் ஊடகப் பொறுப்பாளர் மருத்துவர் ரிமா டாடா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 19ஆம் தேதி நுரையீரல் பிரச்னை காரணமாக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யெச்சூரிக்கு, சில நாள்களாகவே உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லை. 

இரு நாள்களுக்கு முன்னர் செயற்கைச் சுவாசம் அளிக்கத் தொடங்கினர். அதன்பிறகு அதே நிலைமை தொடர்ந்தது. ஆனால் சிக்கல் இல்லை என்று கூறப்பட்டது. 

இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் அவரின் உயிர் பிரிந்தது என அறிவிக்கப்பட்டது.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com