நாடு முழுதும், 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நாளை நடக்கிறது. இதையொட்டி அத்தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கும் நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் நடைபெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்கள், ஒன்றிய ஆட்சிப் பிரதேசங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நாளை நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகள், கர்நாடகத்தில் 14, இராஜஸ்தானில் 13, மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசத்தில் தலா 8, மத்தியப் பிரதேசத்தில் 6, அசாம் - பீகாரில் 5, சத்தீஸ்கர்- மேற்கு வங்கத்தில் 3, மணிப்பூர், திரிபுரா, ஜம்மு - காஷ்மீரில் தலா 1 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.