கட்சிகளுக்கு நிதியளிக்கும் தேர்தல் பத்திர முறை ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on

தேர்தலில் அடையாளம் தெரியாமல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி, உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது. 

தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு நிதி தருவதில் தனி நபர்கள், நிறுவனங்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை என்பதால், எல்லாமே ரகசியமாகவும் கருப்புப்பணமாகவும் இருக்கலாம் பல குடிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 

ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புச்சட்ட அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. 

தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுவரை பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட தேர்தல் நிதி விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6ஆம்தேதிக்குள் அளிக்கவேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com