ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அதிகாலையிலேயே ஹத்ராஸ் புறப்பட்ட ராகுல்…நேரில் ஆறுதல்!

Published on

ஆன்மிகச் சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்தோரின் குடும்பங்களை இன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில், மதபோதகர் போலே பாபா மேடையில் கீழே இறங்கி வந்தபோது, மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி முன்னே சென்றனர். இதில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சத்சங்க நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சேவகர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, ஹத்ராஸ் சம்பவத்துக்குப் பின்னணியில் சதி உள்ளதா என்ற கோணத்தில் விசாரிக்கப்படும் எனவும், சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் குறித்த விரிவான தன்மையையும், விசாரணையில் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பிரிஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் மூன்று பேர் கொண்ட நீதி விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரிந்தோரின் குடும்பங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று அதிகாலை டெல்லியிலிருந்து சாலை வழியாக புல்ராய் கிராமத்திற்கு வருகை தந்தவர், பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் இந்த சோக சம்பவம் எப்படி நடந்தது என்று கேட்டறிந்த ராகுல், அப்போது காங்கிரஸ் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க காங்கிரஸ் உறுதியாக போராடும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com