இந்தியா
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் நினைவு அஞ்சல் தலைகள் மற்றும் உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையைத் திறந்துவைக்க உள்ளார். இந்த நிகழ்விற்கு பல்வேறு முக்கிய தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, ராமர் கோயில் நினைவு தபால் தலைகளையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் இன்று வெளியிட்டுள்ளார்.
48 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் ஐ.நா.சபை, அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர், கனடா, கம்போடியா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகள் வெளியிட்ட தபால் தலைகள் இடம் பெற்றுள்ளன.