அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில்,வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற எனது நண்பர் டிரம்ப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய மற்றும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்கியுள்ளேன்.
மக்களின் முன்னேற்றம், உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து பாடுபடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகமான ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏ.பி. செய்தி நிறுவன தகவலின்படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 267 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் 214 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளார்.