வெங்காய ஏற்றுமதி விலையைவிட அரசு கொள்முதல் செய்யும் விலை குவின்டாலுக்கு 2410 ரூபாய் கூடுதல் என்பதால், ஏற்றுமதி வரி விதிப்பு தொடர்பாக விவசாயிகள் கவலைப்பட வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய நுகர்வோர் விவகார அமைச்சர் பீஸ் கோயில் கேட்டுக் கொண்டுள்ளார்
நடப்பு வேளாண் பருவத்துக்கான வெங்காய சாகுபடி ஒரு பக்கம் இருக்க, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அரசின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா நாசிக் உட்பட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் எதிர்ப்புக்கு இடையே கடந்த ஞாயிறன்று மத்திய அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ஆண்டுதோறும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தைவிட கூடுதலாக இரண்டு லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்யப்படும்.
இது குறித்து நேற்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பியூஸ் கோயல், நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டது என்றும்,
விவசாயிகளிடமிருந்து 3 இலட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்படுவதைவிட இந்த ஆண்டு கூடுதலாக 2 இலட்சம் டன் அதாவது மொத்தம் 5 இலட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இதுவரை இல்லாதபடி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்துக்கு குவிண்டாலுக்கு 2,410 ரூபாய் என அதிக விலை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் சராசரி விலை 1800 - 1900 ரூபாயைவிட இது அதிகமானது என்பதால், விவசாயிகள் கவலைப்பட வேண்டாம் என்று கூறிய அமைச்சர் கோயல்,
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் முடிவுக்கு தவறான பிம்பத்தை கட்டமைக்க முயல்கின்றன என்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.