கிருஷ்ணகிரி பாலியல் கொடுமை- தேசிய மனித உரிமை ஆணையம் தலையீடு!

nhrc
தேசிய மனித உரிமை ஆணையம்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட போலி என்.சி.சி. முகாமில் 13 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்பட்டதாக பிரச்னை எழுந்துள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிவராமன் என்பவர் உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இன்று முதலமைச்சர் ஸ்டாலின் இதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து தனி உத்தரவும் வெளியிட்டுள்ள நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம் இதை சுயவழக்காக எடுத்துக்கொண்டுள்ளது. 

தமிழ்நாட்டு அரசின் தலைமைச்செயலரும் காவல்துறை தலைமை இயக்குநரும் இரண்டு வாரங்களுக்குள் இதுகுறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல்செய்யுமாறும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

முதல் தகவல் அறிக்கையின் நிலவரத்தையும் மாணவிகளின் நலம் தொடர்பாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என்றும் தேசிய ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 

குறிப்பிட்ட ஒரு பள்ளி மட்டுமின்றி இதேபோல நிகழ்ந்ததாகக் கூறப்படும் மற்ற நான்கு பள்ளிகளுக்கும் சென்று விசாரிக்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com