பிரதமர் மோடியின் கன்றுக்குட்டி… நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!

கன்றுக்குட்டியுடன் பிரதமர் மோடி
கன்றுக்குட்டியுடன் பிரதமர் மோடி
Published on

கன்றுக்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் புது டெல்லி, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் வளர்க்கப்பட்டு வரும் பசுமாடு புதிதாக கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. இந்த கன்றுக்குட்டிக்கு மாலை, சால்வை அணிவித்து பிரதமர் மோடி பாசத்துடன் கட்டியணைத்து கொஞ்சி விளையாடுகிறார். இந்தக் கன்றுக்குட்டியின் நெற்றியில் வெள்ளை நிற அடையாளம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அந்த கன்றுக்குட்டிக்கு பிரதமர் மோடி தீபஜோதி என பெயரிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில், கன்றுக்குட்டியின் நெற்றியில், பிரதமர் மோடி முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்துகிறார். தனது வீட்டுக்குள்ளும், தோட்டத்திலும், தீபஜோதியை கையில் ஏந்தியபடி செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com