உமர் அப்துல்லா பதவியேற்பு அழைப்பு, மு.க.ஸ்டாலின் நிராகரிப்பு!

omar abdullah - mkstalin
மு.க.ஸ்டாலின் - உமர் அப்துல்லா
Published on

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்கவுள்ளார். இதற்காக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் அவரின் தந்தையும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கும் பரூக் அப்துல்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு, உமர் அப்துல்லாவின் பதவியேற்பு நிகழ்வுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 

ஆனால், வடகிழக்குப் பருவமழை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, அதற்கான முன்னெச்சரிக்கைப் பணியில் ஈடுபட்டுள்ளதால், தன்னால் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது என்றும் தனக்குப் பதிலாக தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அதில் கலந்துகொள்வார் என்றும் ஸ்டாலின் பதிலளித்தார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com