இந்தியா
அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் சீன எல்லையையொட்டிய பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியே அடித்துச்செல்லப்பட்டு விட்டது.
திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தையும் நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கும் ஒரே சாலை இந்த நெடுஞ்சாலை 313-தான். அனினி, ரூயிங் ஆகிய இடங்களுக்கு இடையேயான பகுதியில் நேற்று இந்த துர்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த சில நாள்களாகவே இந்த மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டிவரும் நிலையில், இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
சாலையைச் சீரமைக்க குறைந்தது மூன்று நாள்களாவது எடுத்துக்கொள்ளும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாநில முதலமைச்சர் பெமா காண்டு, நிகழ்ந்த சம்பவத்துக்காக மிகவும் கவலை தெரிவித்துள்ளார்.