தில்லி மதுக்கொள்கை வழக்கு- கவிதா ராவுக்கு ஜாமின்!

Kavitha KCS
கவிதா சந்திரசேகர் ராவ்
Published on

புதுதில்லி மதுபானக் கொள்கை முறைகேடுக் குற்றச்சாட்டு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த 12ஆம் தேதியன்று கவிதாவுக்கு பிணை வழங்க மறுத்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்த மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் இன்று இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. 

தில்லி அரசின் மதுபானக் கொள்கையில் தங்களுக்குச் சாதகமாக இருப்பதற்காக, ஆம் ஆத்மி அரசின் முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் ஆகியோருக்கு கவிதா தரப்பில் 100 கோடி ரூபாய் கையூட்டு வழங்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், முக்கியமாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மணிஷ் சிசோடியாவும் சஞ்சய் சிங்கும் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

கடந்த மார்ச் 21ஆம் தேதி முதல் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இடையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக அவருக்கு பிணை வழங்கப்பட்டது. 

இந்தப் பின்னணியில், இன்று இதில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய், கேவி விசுவநாதன் அமர்வு, மதுபானக் கொள்கையில் கவிதாவுக்குத் தொடர்பு இருப்பதற்கான சான்று என்ன என அமலாக்கத் துறை, சிபிஐ இரண்டு அமைப்புகளிடம் கேள்வி எழுப்பியது. அதையடுத்து, கவிதாவுக்குப் பிணைவழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com