கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் பதவியை எஸ்.டி.குமார் ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பா.ஜ.க.வும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இது மட்டுமின்றி பகுஜன் சமாஜ் உள்ளிட்ட சிறு கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து தலைவர்கள், வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடகா மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தியில் பதவி விலகியுள்ளார். இதனை அவர் இன்று ஒசூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், பல முக்கிய நிர்வாகிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் பதவி விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.