உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்… யார் இவர்?

Justice Sanjiv Khanna
நீதிபதி சஞ்வீவ் கண்ணா
Published on

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வரும் நவம்பர் 11ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் டி.ஓய்.சந்திரசூட் வரும் நவம்பர் 10ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு, அவருக்கு கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியது. இதனையடுத்து,தனக்கு அடுத்ததாக தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்து இருந்தார்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இவர்,சந்திரசூட் ஓய்வு பெறும் மறுநாள் (நவம்பர் -11) அன்று பதவியேற்க உள்ளார்.

யார் இந்த சஞ்வீப் கன்னா

1960ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி டெல்லியில் இவர் பிறந்தார். டெல்லி பல்கலையில் சட்டம் பயின்றார். இவரது தந்தை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக 1985ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். இவரது தாயார் சரோஜ் கண்ணா டெல்லி ஸ்ரீ ராம் கல்லூரியில் இந்தி பேராசிரியராக பணியாற்றினார்.

1983ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். கடந்த 2004ஆம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ஆம் ஆண்டு சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com