சந்திராயன் 3: ரோவர் கலமும் தரை இறங்குகிறது; முதல் படம் வெளியானது!

சந்திராயன் 3: ரோவர் கலமும் தரை இறங்குகிறது; முதல் படம் வெளியானது!
Published on

சந்திராயன் விண்கலத்தின் தரையிறங்கு கலமான விக்ரம் திட்டமிட்டபடி நிலவில் கால்பதித்த நிலையில், அதற்கு உள்ளே இருந்த பிரக்யான் ரோவர் கலமும் வெற்றிகரமாகத் தரை இறங்கத் தொடங்கியது.

கடந்த ஜூலை 14ஆம் தேதி பூமியிலிருந்து அனுப்பப்பட்ட சந்திராயன் விண்கலத்தின் விக்ரம் கலன், ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.03 மணிக்கு நிலவின் தரையில் பத்திரமாக இறங்கியது. அது தரை இறங்கியவுடன் அங்குள்ள தரைப்பகுதியில் படிந்திருக்கும் பல்வேறு கனிமப் பொருள்கள் விண்வெளியில் பெரும் தூசியை ஏற்படுத்தும் என்பதால், உடனடியாக பிரக்யான் ஊர்திக் கலத்தை இறக்கவேண்டாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

தூசி ஒருவாறு அடங்கியதும் தாய்க்கலமான விக்ரம் தரையிறங்கியின் வயிற்றுக்குள் இருந்துவந்த பிரக்யான் ஊர்திக் கலம், சாய்கதவு வழியாக மெல்ல நிலவில் தரை இறங்கியது. இதன் முதல் படத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com