இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. இப்படி அயல் நாடுகளுக்குச் சென்றுவருபவர்கள் அங்கு நடந்துகொள்ளும் விதம் பற்றி விதவிதமான தகவல்கள் கூறப்படுகின்றன. தங்கும் விடுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் துண்டுகளைக்கூட நம் ஆட்கள் எடுத்துச்சென்றுவிடுவதாகப் புகார்கள் வந்துள்ளன.
அண்மையில் துருக்கிக்குச் சென்றுவந்த தமிழர் ஒருவர் தன் அனுபவத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர, அதை 2.66 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கின்றனர். பதில் பகுதியில் அவரவர் அனுபவத்தையும் கருத்தையும் பலரும் பகிர்ந்திருக்கிறார்கள். கதைபோல இருக்கும் சம்பவங்கள், படிக்கப் படிக்க அதிர்ச்சியூட்டுகின்றன.
காக்கைச்சித்தர் என்கிற பெயரில் வெளியாகியுள்ள அந்தப் பதிவு விவரம்:
“ஒரு நீளமான வேதனையான பதிவு: துருக்கி கப்பதோக்கியா பகுதி டூரிசத்திற்கு பெயர் போன ஒன்று. Hot air balloon போன்ற பல ஆக்டிவிட்டிகள் ஏக பிரபலம். துருக்கி என்றாலே இப்பகுதிக்கு இந்தியர்கள் டூர் வருவது வழக்கம். இங்கு நான் தங்கியிருந்த 4 நாட்களில் ஏராளமான இந்தியர்களை பார்த்திருந்தேன்.
ஹோட்டல் செக் அவுட் செய்துவிட்டு ஏர்போர்ட் செல்ல பஸ் ஹோட்டலுக்கே வந்து பிக்கப் செய்ய அரைமணிநேரமாவது ஆகும். எனவே லாபியில் நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். அதுவரை அந்த ஹோட்டல் ஓனர் எங்களிடம் பேசிக்கொண்டேயிருந்தார். "என்னை ரேசிஸ்டாகவோ, discriminate செய்வதாகவோ நினைக்க வேண்டாம். ஏன் பெரும்பாலான இந்தியர்கள் பிரச்சனை செய்பவர்களாகவே இருக்கிறார்கள்? நான் 32 வருடமாக ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறேன். இந்த ஹோட்டலில் 100 நாடுகளுக்கு மேல் கெஸ்டுகள் தங்கியிருக்கிறார்கள். எந்த நாட்டினரும் இந்தளவு எனக்கு தொல்லை கொடுத்ததேயில்லை. ஒவ்வொரு முறையும் இந்திய பெயர்களை கெஸ்ட் லிஸ்டில் பார்த்தாலே என்னையறியாமல் பதட்டமடைகிறேன்" என்றார்.
எனக்கு இது புதிதல்ல என்பதால் அதிர்ச்சியடையவில்லை. என்ன மாதிரி பிரச்சனை செய்கிறார்கள் என்று கேட்டேன். அவர் ஒரு லிஸ்டே கொடுத்தார்.
செக் இன் நேரம் மதியம் 2 மணி என்றால் காலை 6 மணிக்கே வந்து நின்று ரூம் வேண்டும் என்று கேட்கிறார்கள். ரூம் காலியாக இருந்தால் கொடுப்பேன், இல்லையென்றால் இல்லைன்னு சொல்லிவிடுவேன். இல்லையென்று சொல்லிவிட்டால் கடுப்பாகி சண்டை போட ஆரம்பிக்கிறார்கள். Trip advisor, Booking dot comல் நெகடிவ் ரிவ்யூ எழுதிவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள். ஒரு முறை ஒரு பெண்மணி early check in கிடைக்கவில்லை என்று மேலாடையை கழட்டி மிரட்ட தொடங்கிவிட்டதாம். இதை நான் எதிர்பார்க்கவில்லை.
மேலும் தொடர்ந்தார்... ஹோட்டல் ரூல்ஸ் எதையும் ஃபாலோ செய்வதில்லை, எக்ஸ்ட்ரா டவல் கேட்பது, டவல்களைத் திருடுவது, காலை ப்ரேக்ஃபாஸ்ட் குறித்த நேரத்திற்கு முன்னாடியே எதிர்பார்ப்பது, காலை புஃபே உணவை வழித்து துடைத்து, மதிய உணவுக்கு உபயோகிப்பது. அன்றைய தினம் பக்கத்து ஹோட்டலில் ஒரு பிரச்சனை ஆகிவிட்டதாம். Guided group tourக்கு ஒரு இந்திய குடும்பம் டைமுக்கு கிளம்பவில்லையென அந்த வேன் கிளம்ப பார்த்திருக்கிறதாம். அந்த இந்திய ஆண் இன்னும் சிறிது நேரம் வெயிட் செய்யுங்கள் என்று கூறவே, இவர்கள் முடியாது என்று கிளம்ப பார்த்திருக்கிறார்கள். அப்போது சண்டை பெரிதாகவே அந்த இந்தியர் அங்குள்ள லோக்கல் டூர் கைடு பெண்மணியின் கன்னத்தில் அறைந்து விட்டாராம். இப்போது போலீஸ் கம்ப்ளெய்ண்ட் ஆகி குடும்பமே போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறதாம். எப்பிடி விடுமுறைக்கு வந்த இடத்தில் சந்தோஷமாக நேரத்தை கழிக்காமல், எப்போதும் பிரச்சனை செய்வதும், யாரையாவது திட்டிக்கொண்டுமே நேரத்தை கழிக்கிறார்கள் என்று என்னிடம் கேட்கிறார்.
எங்களுக்கு எந்த பதிலும் இல்லை. இதைத் தவிர தேவையில்லாமல் favor கேட்பது, fixed priceக்கு bargain செய்வது, Booking dot comல் ஹோட்டல் பெயரை பார்த்துக்கொண்டு இண்டர்நெட்டில் தேடி டைரக்டாக அந்த ஹோட்டல் ஓனரை கண்டுபிடித்து குடுத்திருக்கும் ரேட்டைவிக்ட குறைத்துக் கேட்பது, இந்தியாவிலிருந்து வந்தாலும் அமெரிக்கா என்று பேரை போட்டு ஏமாற்றுவது என்று அவர் சொன்ன லிஸ்டில் இது ஒரு சாம்பிள் மாத்திரமே.
கடைசியாக என்னிடம் அவர் வைத்த கோரிக்கை என்னெவென்றால், இதை உங்கள் நாட்டில் இருக்கும் ஜர்னலிஸ்டுகளிடம் சொல்லி நியூஸில் போடுங்கள். இந்த பகுதியிலுள்ள 300+ ஹோட்டல் ஓனர்களும் மிகவும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். இதை நாங்கள் எப்பிடி டீல் செய்வது என்றே தெரியவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டார்.
நான் கடைசியாக ஒன்று மட்டும் சொல்லிக்கொண்டு வந்தேன். ’இந்தியா மிகப்பெரிய நாடு. ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு மாதிரியான குணாதிசயம் கொண்டவர்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் தெரியும். நீங்கள் சொன்ன பெரும்பான்மையான விஷயங்களை தென்னிந்தியர்களாகிய நாங்கள் பண்ணவே மாட்டோம். இது எங்களுக்கு மிகவும் சீப்பான ஒன்று. எங்களுக்கு தன்மானம் மிகவும் உண்டு. எனவே எல்லா இந்தியர்களையும் ஒன்றாக நினைக்கவேண்டாம்.’ என்றேன்.
இந்த டாபிக் இதுவரை பேசுபொருள் ஆகவில்லை. வரும் வருடங்களில் ஆனால், X தளத்தில் நான் பதிவு செய்திருப்பது மீண்டும் பேசப்படும்.
கடைசியாக ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: தென்னிந்தியர்களாகிய நாம் வட இந்தியர்களைவிட பத்து மடங்கு டீசண்டாக இருந்தால்தான் இந்தியாவின் மானத்தைக் காப்பாற்ற முடியும். End.”