40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் கிரீஸ் பயணம்!

பிரதமர் மோடி கிரீஸ் பயணம்
பிரதமர் மோடி கிரீஸ் பயணம்
Published on

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று வெளிநாடுகளுக்குப் புறப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவின் தலைநகர் ஜொகன்னேஸ்பர்க்கில் இன்று செவ்வாய் தொடங்கவுள்ள பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார். பிரேசில், ரசியா, இந்தியா, சீனம், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பின் மாநாடுகள், கொரோனாவால் சில ஆண்டுகளாக காணொலிக் காட்சி மூலமாகவே நடைபெற்றுவந்தது.

இதில் பல ஆப்பிரிக்க நாடுகள், வங்கதேசம், இந்தோனேசியா ஆசிய நாடுகளின் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்கின்றனர்.

ஜொகன்னேஸ்பர்க் உச்சி மாநாட்டில், பிரிக்ஸ் அமைப்பை விரிவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதுவரை 23 நாடுகள் பிரிக்சில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

பிரிக்ஸ் விரிவாக்கத்துக்கு இந்தியாவும் சீனாவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பிரிக்ஸ் மாநாட்டை அடுத்து, பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடுகளின் 'பிரிக்ஸ் - ஆப்பிரிக்கா அவுட்ரீச்- பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்' நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதிலும் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்திக்கும்நிலையில், சீன அதிபருடன் பிரதமர் பேசுவாரா என்பது இன்னும் இறுதியாகவில்லை.

பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி 25ஆம் தேதி கிரீஸ் நாட்டுக்குச் செல்கிறார். அந்நாட்டிப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர், அந்நாட்டுக்குச் செல்வது இதுவே முதல் முறை.

logo
Andhimazhai
www.andhimazhai.com