இமாச்சல் காங்கிரசில் குழப்பம்: ஆளுரை சந்தித்த பா.ஜ.க., எம்.எல்.ஏ.கள்!

ஆளுநர் சிவ பிரதாப் சுக்லவை சந்தித்த பா.ஜ.க., எம்.எல்.ஏ.கள்
ஆளுநர் சிவ பிரதாப் சுக்லவை சந்தித்த பா.ஜ.க., எம்.எல்.ஏ.கள்
Published on

இமாச்சால பிரதேச காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், மாநில ஆளுநர் சிவ பிரதாப் சுக்லவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகூர் தலைமையில் பா.ஜ.க., எம்.எல்.ஏ.கள் இன்று காலை சந்தித்து பேசினர்.

இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.கள் இருந்தும், 25 எம்.எல்.ஏ.கள் கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் கட்சி மாறியும், 3 சுயேச்சைகளும் வாக்களித்ததால் பா.ஜ.க. வேட்பாளா் ஹா்ஷ் மஹாஜனுக்கு வாக்களித்தனா். இதனால் காங்கிரஸ் வேட்பாளரான அபிஷேக் மனு சிங்வியும், ஹா்ஷ் மஹாஜனும் 34 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனா்.

பின்னா் குலுக்கள் முறையில் தோ்வு செய்யப்பட்டதில் பா.ஜ.க. வேட்பாளா் ஹா்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றாா்.

கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் சுக்விந்தர் சிங், பேரவைத் தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஹிமாசல் ஆளுநர் பிரதாப் சுக்லாவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகூர் தலைமையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.கள் சந்தித்து ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com