இந்தியா
மக்களவைத் தேர்தலின் நான்காம் கட்டமாக ஒன்பது மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி ஆகியவற்றில் உள்ள 90 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளைமறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்துடன் 175 தொகுதிகளைக் கொண்ட ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான சூறாவளிப் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது.
ஆந்திரம் 25 தொகுதிகள், தெலங்கானா 17 தொகுதிகள் என ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.
பீகாரில் 5 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4, மத்தியப்பிரதேசத்தில் 8, மகாராஷ்டிரத்தில் 11, ஒதிசாவில் 4, உ.பி.யில் 13, மேற்குவங்கத்தில் 8 என மற்ற மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
இத்துடன் ஒதிசாவில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இந்தக் கட்டத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது.