புதுதில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் அவர் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியையும் அமலாக்கத் துறை வழக்கில் சேர்த்துள்ளது.
தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மீது இன்று குற்றப்பத்திரிகையைத் தாக்கல்செய்த அமலாக்கத் துறை, அதில் அவரின் கட்சியையும் குற்றவாளியாகச் சேர்த்துள்ளது.
இந்த வழக்கில் இதுவரை எட்டு குற்றப்பத்திரிகைகளை அமலாக்கத் துறை தாக்கல்செய்துள்ளது. இதுவரை 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் இதே வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா முதலிய5 பேர் மீது மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.
கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று தில்லி முதலமைச்சரின் அதிகாரபூர்வ இல்லத்தில் வைத்து அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டார். சில நாள்களுக்கு முன்னர், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியது குறிப்பிடத்தக்கது.