இவங்களையெல்லாம் என்னத்த சொல்றது…?

ரயில் வருவதை அறிந்து கீழே குதிக்கும் தம்பதியினர்
ரயில் வருவதை அறிந்து கீழே குதிக்கும் தம்பதியினர்
Published on

‘வரவர எல்ல மீறி போயிட்டு இருக்கீங்க’ என்று ஆதங்கப்படுகிற அளவுக்கு போட்டோ ஷூட் கலாச்சாரம் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் திருமணம் ஆகவுள்ள இளம் ஜோடிகள், திருமணமான புது தம்பதிகள் நடத்தும் போட்டோ சூட்டுகள் ரசிக்கும்படி இருந்தாலும், இதற்கு பின்னால் சில ஆபத்துகள் உள்ளன.

அப்படியொரு சம்பவம்தான் இது...

ராஜஸ்தான் மாநிலம் பாக்டி நகரில் உள்ள காலால் கி பிபாலியான் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ராகுல் (22) – ஜான்வி (20). இவர்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது. இதனால், ராஜஸ்தானில் உள்ள பாலி என்ற இடத்தில் போட்டோஷூட் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக அவர்கள், 90 அடி உயரத்தில் உள்ள பழமையான ரயில் மேம்பாலத்தில் புகைப்படம் எடுக்க சென்றுள்ளனர்.

அப்போது அந்த தண்டவாளத்தில் திடீரென ரயில் வந்ததால், அவர்களால் உடனடியாக அங்கிருந்து ஓடிவர முடியவில்லை. அதே சமயம், ரயில் மோதினால் உயிர் பிழைப்பது கடினம் என்பதால், அவர்கள் இருவரும் பாலத்திலிருந்து 90 அடி பள்ளத்தில் குதித்துள்ளனர்.

இதில், படுகாயமடைந்த அந்த தம்பதியினரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2 பேரின் உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்வத்தில் இப்படி எதாவது செய்வதற்கு முன்னர் கொஞ்சம் யோசிங்கப்பா….

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com