ஒரே தேர்தல் குழுவில் சேர காங்கிரஸ் கட்சி மறுப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல்
Published on

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தொடர்பான குழுவில் சேர காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே தேர்தல் முறை குறித்து ஆராய முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுவின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் காங்கிரஸ் குழுத் தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி என எட்டு பேர் நியமிக்கப்பட்டனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தொடர்பாக இந்தக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு கண் துடைப்பு நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் குழுவிலிருந்து விலகியுள்ளார்.

இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சீரழிக்கும் சட்டரீதியான முயற்சி இது என்று காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com