இந்தியா
சந்திராயன் 3 விண்கலத்தின் ரோவர் ஊர்தியும் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இஸ்ரோ இதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ இன்று காலை 8.30 மணியளவில் டுவிட்டரில் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
”நிலவுக்கான பயணத்துக்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது சந்திராயன் 3 ரோவர் ஊர்தி. லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் ஊர்திக் கலம் விடுபட்டு, நிலவில் கால்பதித்தது. சிறு தொலைவுக்கு அது நகரந்தது.” என்று இஸ்ரோவின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.