நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட்டைத் தொடர்ந்து… நெட் தேர்விலும் முறைகேடு!

Published on

யுஜிசி நெட் ஜூன் 2024 தேர்வை செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு நாடு முழுவதும் இரண்டு ஷிப்ட்களாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) நடைபெற்றது. இந்த தேர்வை 11 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். கடந்த சில ஆண்டுகளாக கணினி வழியாக நடைபெற்ற நெட் தேர்வு இம்முறை ஓஎம்ஆர் சீட் முறையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்திருப்பதாகவும், இதனால் மத்திய கல்வி அமைச்சகமும், மத்திய அரசும் இணைந்து இந்த ஆண்டுக்கான நெட் தேர்வை ரத்து செய்வது என முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பு தனியாக வெளியிடப்படும் என்றும், இந்த முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு தொடர்பான சர்ச்சை இன்னும் முடியாத நிலையில், நெட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக தெரியவந்திருப்பது மாணவர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com