காவிரி ஆறு
காவிரி ஆறு

காவிரி நதி நீர்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு; கர்நாடக பாஜக எதிர்ப்பு!

Published on

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய பங்கீட்டு நீரை விடுவிக்க உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் படி, ஜூன் முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரையில் தமிழகத்துக்கு 53.77 டிஎம்சி. தண்ணீர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு வெறும் 15.79 டி.எம்.சி. நீரை மட்டுமே வழங்கியுள்ளது. பற்றாக்குறை நீரின் அளவு 37.97 டி.எம்.சி. எனவே, தமிழகத்துக்கான உரிய பங்கீட்டு அளவு நீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, உச்சநீதிமன்றத்தில் 113 பக்கங்களைக் கொண்ட விரிவான மனுவை தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, ”கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க வேண்டாம். கர்நாடக அணைகளில் உள்ள நீரானது, பெங்களூரு மற்றும் கர்நாடக விவசாயிகளுக்கே போதுமானதாக இல்லை.

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டால், கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்” இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com