6 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் - பா.ஜ.க., இந்தியா கூட்டணி பாதிக்குப் பாதி வெற்றி!

6 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
6 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைDELL
Published on

ஆறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜகவும் இந்தியா கூட்டணியும் பாதிக்குப் பாதி வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 5ஆம் தேதியன்று உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், திரிபுரா, கேரளம் ஆகிய மாநிலங்களில் ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

இதில், கேரள மாநிலம் புதுப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மகன், அவருடைய தந்தையின் தொகுதியைத் தக்கவைத்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் போக்சநகர், தன்புர் ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க. வென்றுள்ளது. உத்தரகண்ட் பாகேஸ்வர் தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதில் போக்சநகர் தொகுதியில் சிபிஐஎம் கட்சி வெற்றி பெற்றிருந்தது.

ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதியில் இந்தியா கூட்டணியின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு வங்கத்தில் தூப்குரி தொகுதியில் பாஜக வேட்பாளரை திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் தோற்கடித்தார்.

இந்தத் தொகுதி முன்னதாக பாஜகவின் வசம் இருந்தது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளரைவிட சமாஜ்வாதி கட்சி மாலை 5 மணி நிலவரப்படி 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது. இங்கு சமாஜ்வாதியே வெற்றிபெற வாய்ப்பு உண்டு என்பதால், அந்தக் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா கூட்டணியும் அது உருவாக்கப்பட்ட பிறகு நடத்தப்படும் முதல் தேர்தல் என்பதால், இந்த முடிவில் உற்சாகம் அடைந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com