வாக்குப் பதிவு எந்திர சர்ச்சை: எலான் மஸ்கை இழுக்கும் ராகுல்!

ராகுல் காந்தி, எலான் மாஸ்க்
ராகுல் காந்தி, எலான் மாஸ்க்
Published on

“இந்தியாவில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ‘கருப்புப் பெட்டி’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மும்பை வடமேற்கு தொகுதியில் போட்டியிட்டு, 48 வாக்குகள் வித்தியாத்தியத்தி வெற்றி பெற்ற ரவீந்திர தத்தாராம் வைகரின் உறவினர்கள் வாக்குப் பதிவு இயந்திரத்தை அன்லாக் செய்யும் மொபைல் வைத்திருந்ததாக வெளியான செய்தியையும், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்.” என்ற எலான் மாஸ்கின் எக்ஸ் தள பதிவையும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி,

“இந்தியாவில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒரு கருப்புப் பெட்டி. இதை ஆராய்வதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “நமது தேர்தல் நடைமுறையின் வெளிப்படத்தன்மை குறித்து தீவிர கவலைகள் எழுப்பப்படுகின்றன.

அமைப்புகள் பொறுப்பேற்க முடியாத நிலையில் ஜனநாயகம் ஏமாற்று நாடகமாக மாறி மோசடிக்கு ஆளாகிறது.” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் எழுந்த விவாதம், தற்போது எலான் மாஸ்க் பதிவால் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com