வல்லுறவுக்கு முயன்ற மருத்துவரின் அந்தரங்க உறுப்பை அறுத்த செவிலியர்!

bihar woman cut private part of rape accused
பீகாரில் வல்லுறவுசெய்ய முயன்ற மருத்துவரின் அந்தரங்க உறுப்பு வெட்டு
Published on

மேற்குவங்கப் பெண் மருத்துவர் வல்லுறவுக் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்காக நீதி கேட்கும் போராட்டம் இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் தனியார் மருத்துவமனை செவிலியர் வல்லுறவுக் கொடுமையிலிருந்து தப்பியிருக்கிறார்.

பீகார் மாநிலம் கங்காபூரில் உலா ஆர்பிஎஸ் ஹெல்த்கேர் எனும் மருத்துவமனையில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு மருத்துவமனை நிர்வாகியான சஞ்சய் குமாரும் அவரின் இரு நண்பர்களும் குடிபோதையில் குறிப்பிட்ட செவிலியரை அடைத்துவைத்து வல்லுறவுக்கு முயன்றனர்.

அவர்கள் கடும் போதையில் இருந்தநிலையில், சஞ்சய்குமாரின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டிவிட்டு தப்பி வெளியே வந்தார்.

காவல்துறைக்குத் தெரிவித்ததையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். உறுப்பு வெட்டப்பட்ட மருத்துவர் உட்பட மூவரும் கைதுசெய்யப்பட்டனர் என்று துணை காவல்கண்காணிப்பாளர் சஞ்சய் பாண்டே தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com