சாதிவாரி கணக்கெடுப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு

பீகார் சாதிவாரிக் கணக்கெடுப்பு முடிவு - ஓபிசி 63%, எஸ்.சி -19.65 %

Published on

பீகார் மாநில அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுக்கும் பணி இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், இன்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திய முதல் மாநிலம் என பீகார் பெயர்பெற்றுள்ளது.

பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 13 கோடி பேர்.

பிற்படுத்தப்பட்டோர்: 27 %

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்- ஓபிசி: 36.01 %

பட்டியல் சாதியினர்: 19.65 %

பட்டியல் பழங்குடியினர்: 1.68 %

மற்ற சாதியினர்: 15.5 %

நிதீஷ்குமார் தலைமையிலான ஆளும் அரசு, சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடிவுசெய்ததும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. பா.ஜ.க. கட்சியும் கடுமையாக எதிர்த்தது. ஆனாலும் பீகார் மாநில அரசு கடந்த ஜனவரி 7 முதல் 21வரை முதல் கட்டப் பணி முடித்து, ஏப்ரல் 15- மே 15வரை இரண்டாம் கட்டப் பணி நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால், வழக்கு தொடுக்கப்பட்டதால் அப்பணி நிறுத்தப்பட்டது.

பின்னர், பீகார் உயர்நீதிமன்றம் தடையை விலக்கியபின்னர் தொடர்ந்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒருவழியாக அது நிறைவுபெற்றுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com